சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியர், வெப் எடிட்டர் காலி பணியிடம்.. விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்

By Thanalakshmi VFirst Published Sep 18, 2022, 3:48 PM IST
Highlights

சென்னை அகில இந்திய வானொலியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர் (News Editors on casual basis) மற்றும் வெப் எடிட்டர் (Web Editor)  ஆகிய பணிகளில் பணியாற்ற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. 
 

நிறுவனத்தின் பெயர்: சென்னை அகில இந்திய வானொலி

பணியின் பெயர் : News Editor, Web Editor

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வுக்கட்டண ரசீதுடன், கல்வித்தகுதி, பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக 354 ரூபாயை, www.onlinesbi.sbi/sbicollect/  என்ற இணையதளத்தில் New Casual Assignee Exam Fees என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு: 

பகுதி நேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பகுதி நேர வெப் எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே

கல்வித் தகுதி: 

பகுதி நேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் மூன்றாண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யும் திறனும், செய்திகளை உடனுக்குடன் பதவிடும் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர வெப் எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் இரண்டு ஆண்டு கால பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆடியோ வீடியோ எடிட்டிங்கில் திறனும் சமூக வலைதள பக்கங்களுக்கான செய்திகளை வடிவமைப்பதில் திறனும் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: 

சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.   

சம்பள விவரம்: 

பணியின் அடிப்படையில் மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

செய்திப்பிரிவு தலைவர், 
அகில இந்திய வானொலி, 
எண்.4, காமராஜர் சாலை, 
மயிலாப்பூர், 
சென்னை 600 004

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

click me!