450 காலியிடங்கள்.. டிகிரி படித்திருந்தால் போதும்.. ரிசர்வ் வங்கியில் வேலை.. முழு விவரம் இதோ..

By Ramya s  |  First Published Sep 13, 2023, 1:52 PM IST

இந்திய ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நிலையில், விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 450 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ரிசர்வ் வங்கி உதவியாளர் 2023 இன் ஆன்லைன் முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 21 மற்றும் 23 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் முதன்மைத் தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி

Tap to resize

Latest Videos

undefined

இந்திய குடிமகனா இருக்கும் எவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பாகிஸ்தான், பர்மா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா ஐக்கிய குடியரசு, ஜாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் விண்ணப்பிக்கலாம். .எனினும், அத்தகைய விண்ணப்பதாரர்கள், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை! 417 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு!

வயது வரம்பு :

செப்டம்பர் 1 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 20 மற்றும் 28 வயதுக்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள், அதாவது செப்டம்பர் 2, 1995 க்கு முன் பிறந்தவர்கள் மற்றும் செப்டம்பர் 1, 2003 க்குப் பிறகு பிறந்தவர்கள், இந்த இரண்டு தேதிகளையும் சேர்த்து, பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 1, 2023க்குள் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் தேவையில்லை, ஆனால் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி தேவை. 

ஒரு குறிப்பிட்ட ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும் - ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் வரும் மாநிலத்தின் மொழியைப் படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மொழித் தேர்வு

முதன்மைத் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரப்பூர்வ/உள்ளூர் மொழியில்(களில்) நடத்தப்படும் மொழிப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

RBI உதவியாளர் அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

RBI உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் 

click me!