சான்றிதழ்கள் காணாமல் போனால் இணையத்தில் எளிதாக டவுன்லோடு செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சான்றிதழ் தொலைந்து போனால் அதை மீண்டும் வாங்குவதற்கு பாடுபடவேண்டிய நிலை மாறிவிட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் லாக்கர் திட்டத்தின் மூலம் சான்றிதழ்களை இணையத்தில் பதிவு செய்து வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். இதேபோல, தமிழ்நாடு அரசு பள்ளிச் சான்றிதழ்கள் தொலைந்து போனால் இணையத்தில் எளிதாக டவுன்லோடு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி தேர்ச்சி சான்றிதழ் தொலைந்துவிட்டால் https://www.epettagam.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்ய முடியும். ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தத் தளத்திற்குள் நுழையலாம்.
Latest Videos
undefined
ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP பாஸ்வேடு கிடைக்கும். அதை பயன்படுத்தி இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் 12ஆம் வகுப்பு சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ், திறன் சான்றிதழ் போன்ற பல ஆப்ஷன்கள் இருக்கும். தேவையான சான்றிதழ் எது என்பதைப் பார்த்து அதைக் கிளிக் செய்யலாம்.
உதாரணமாக, 12ஆம் வகுப்பு மணிப்பெண் சான்றிதழ் வேண்டும் என்றால் HSC Education என்பதைத் தேர்வு செய்து, வரிசை எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, பிறந்த தேதி போன்ற தகவல்களைக் குறிப்பிட்டு Submit என்பதைக் கிளிக் செய்தால் சான்றிதழ் டவுன்லோட் ஆகிவிடும்.
2004ஆம் ஆண்டில் இருந்து பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் இந்த வசதியை பயன்படுத்தி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.