தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 6,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: கூட்டுறவுத்துறை
காலி பணியிடங்கள்: 6503
பணியின் பெயர்: விற்பனையாளர், உதவியாளர்( கட்டுநர்)
விண்ணப்பிக்கும் முறை:
மாவட்ட வாரியான காலி பணியிடங்களுக்கு அந்தெந்த மாவட்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டுநர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:சத்யாவுக்கு நடந்த துயரத்தால் மனவேதனையில் இருக்கிறேன்.. இனி எந்த பெண்ணும் இது நடக்ககூடாது: முதல்வர் உருக்கம்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தொகுப்பூதியமாக ஓராண்டு வரை மாத சம்பளமாக ரூ.5,500 வழங்கப்படும். அதன் பின்னர் மாதம் ரூ.7,500 - 26,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
10 ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .
மேலும் படிக்க:தேனி பெரியகுளம் பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தடை போட்ட நீதிமன்றம்.. நீதிபதி அதிரடி உத்தரவு