மதுரை தல்லாகுளம் தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை தல்லாகுளம் தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Skilled Artisans பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து அதனை விரைவு, பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். \
விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை The Manager, Mail Motor Service,Madurai-625002 என்ற பெயருக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டராக(ஐபிஓ) எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முகவரி: The Manager, Mail Motor Service, CTO Compound, Tallakulam, Madurai-625002