ரூ.63,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு; இளைஞர்களுக்கு அழைப்பு

By Velmurugan s  |  First Published Aug 16, 2024, 11:33 PM IST

சென்னையில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


சென்னையில் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள 10 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர் 1/7/24 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

Aadudam Andhra: ஆடுதாம் ஆந்திரா; ஊழல் புகாரில் சிக்கும் நடிகை ரோஜா? 

மேலும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் என்றும், எம்.வி. மெக்கானிக் பாடப்பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சயுடன் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

SA Vs WI: ஒரே நாளில் 17 விக்கெட், SA பேட்ஸ்மேன்களை அலறவிடும் WI பௌலர்கள்

ஆர்வம் உள்ளவர்கள் ரூ.400 கட்டணத்தை இந்திய அஞ்சல் வில்லையாக எடுத்து விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து The Senior Manager, Mail Motor Service, No. 37, Greams Road, Chennai என்ற முகவரிக்கு வருகின்ற 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வாகும் நபர்களுக்கு 19,900 முதல் 63,200 வரை ஊதியமாக வழங்கப்படும்.

click me!