கல்விக் கடன் பெறும் முடிவில் இருப்பவர்கள் அதற்கு முன் சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். கடன் வழங்குபவர்கள் நிர்ணயிக்கும் தகுதி மற்றும் அளவுகோல்களைப் புரிந்துகொள்வது அவசியம். இவை கடன் வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
வெளிநாட்டில் உயர்கல்வி தொடர்வது பல இந்திய மாணவர்களின் கனவாக உள்ளது. உலகத்தரம் வாய்ந்த கல்வியுடன் பல்வேறு கலாச்சாரங்களை அறியவும், உலகளாவிய கண்ணோட்டங்களைப் பெறவும் வெளிநாட்டுப் படிப்பை விரும்புகிறார்கள். இருப்பினும், கல்விக் கட்டணம் மற்றும் இதரவு செலவுகள் காரணமாக வெளிநாட்டுப் படிப்பு பல மாணவர்களுக்கு கனவாகவே இருக்கிறது.
வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இருக்கும் நிதி நெருக்கடிக்கு கல்விக் கடன்கள் ஒரு தீர்வாக இருக்கின்றன. கல்விக் கடன் மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கிறது. இதனால், உடனடி செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. கல்விக் கட்டணம், தங்குமிடம், பயணச் செலவுகள் மற்றும் பிற இதர செலவுகள் உட்பட பல்வேறு செலவுகளை கல்விக் கடன் மூலம் சமாளிக்க முடியும்.
undefined
ஆனால், கல்விக் கடன் பெறும் முடிவில் இருப்பவர்கள் அதற்கு முன் சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். கடன் வழங்குபவர்கள் நிர்ணயிக்கும் தகுதி மற்றும் அளவுகோல்களைப் புரிந்துகொள்வது அவசியம். இவை கடன் வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
அமெரிக்காவில் படிக்கணுமா? தூதரகம் நடத்தும் கல்விக் கண்காட்சியில் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
இந்தியக் குடியுரிமை: பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்கள், வெளிநாட்டில் கல்வி படிக்க கல்விக் கடன் கோருபவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படை தகுதியாக வைத்துள்ளன.
மாணவர் சேர்க்கை அல்லது ஏற்பு கடிதம்: விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதற்கான தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து மாணவர் சேர்க்கை அல்லது ஏற்பு கடிதத்தை வழங்க வேண்டும்.
வயது வரம்பு: கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் பொதுவாக 18 முதல் 35 வயது வரை வயது வரம்பு விதிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் உயர்கல்வியைத் தொடர பொருத்தமான வயது வரம்புக்குள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி: விண்ணப்பதாரரின் கல்வித் திறனை மதிப்பிடுவதற்கு, ஒரு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். குறைந்தபட்ச கல்வித் தகுதியை கடன் வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்.
இணை விண்ணப்பதாரர்: கடன் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடன்களுக்கு இணை விண்ணப்பதாரர் அல்லது பிணை பாதுகாப்பைக் காட்ட வேண்டும்.
சிறந்த கல்விக் கடன் வழங்குபவர் யார்?:
வெளிநாட்டில் படிப்பதற்கு மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் ஏராளமான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) இந்தியாவில் உள்ளன. அவற்றில் சிறந்தவை சிலவற்றைப் பார்க்கலாம்.
● பாரத ஸ்டேட் வங்கி
பல ஆண்டுகளாக, வெளிநாட்டில் படிக்க கல்விக் கடன் பெறும் மாணவர்களிடையே எஸ்பிஐ பிரபலமாக உள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு கடன்களை வழங்குகிறார்கள். எஸ்பிஐயின் கல்விக் கடனில் கல்விக் கட்டணம், தேர்வு அல்லது ஆய்வகச் செலவுகள், பயணம், பாதுகாப்பு வைப்புத்தொகைகள், புத்தகங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு செலவுகள் அடங்கும்.
● HDFC கிரெடிலா
எச்டிஎஃப்சி கிரெடிலா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் படிக்கச் செல்பவர்களுக்கு கடன் வழங்குகிறது. விசா செயல்முறை தொடங்கும் முன் கடன் ஒப்புதல் கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறது. HDFC கிரெடிலா, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலையான வைப்புத்தொகைகள் அல்லது பிற சொத்துக்களை பிணையமாகக் கோருகிறது.
● ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியில் வெளிநாட்டு கல்விக் கடன் கல்விக் கட்டணம், போக்குவரத்து, விசாக்கள், புத்தகங்கள் என விரிவான கவரேஜ் கொண்டது. வெளிநாட்டில் அல்லது இந்தியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்சிஸ் வங்கி நிதியுதவி வழங்குகிறது.
● பஞ்சாப் நேஷனல் வங்கி
பிஎன்பி வங்கியின் "உதான்" திட்டம் வெளிநாட்டில் இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் பட்டப் படிப்பைத் தொடரும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. உதான் கல்விக் கடன், கல்விக் கட்டணம், போக்குவரத்து, விசாக்கள், புத்தகங்கள் உட்பட பலதரப்பட்ட செலவினங்களை உள்ளடக்கியது.
● கனரா வங்கி
கனரா வங்கியின் கல்விக் கடன் கல்விக் கட்டணம், வீட்டுவசதி, இதர உபகரணங்கள் மற்றும் பயணச் செலவுகள் உட்பட பல செலவுகளை உள்ளடக்கியது. பல்வேறு துறைகளில் வெளிநாட்டுப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
குரோம் பிரவுசரில் சூப்பர் பவர் வேணுமா? இந்த AI எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் பண்ணிக்கோங்க!