அமெரிக்காவில் படிக்கணுமா? தூதரகம் நடத்தும் கல்விக் கண்காட்சியில் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!

By SG Balan  |  First Published Aug 14, 2024, 7:16 PM IST

இந்தக் கண்காட்சியில் இலவசமாகவே கலந்துகொள்ளலாம். கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழக பிரதிநிதிகளைச் சந்திக்க விரும்பினால் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும்.


அமெரிக்க உயர்கல்வித் துறை சார்பில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்தியாவில் கல்விக் கண்காட்சிகளை நடத்துகிறது. சென்னை உள்பட எட்டு முக்கிய நகரங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.

EducationUSA என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சிகள் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் முடிவடையும். 10 நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள எட்டு நகரங்களில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.

Latest Videos

undefined

இந்த கண்காட்சிகள் அமெரிக்காவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 80 க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்தக் கண்காட்சியில் இலவசமாகவே கலந்துகொள்ளலாம். கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழக பிரதிநிதிகளைச் சந்திக்க விரும்பினால் முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும்.

பிரஷ்ஷர்களுக்கு ரூ.2.52 லட்சம் சம்பளம்... காக்னிசென்ட் விளம்பரத்தை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

இந்த கண்காட்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "அமெரிக்கா வழங்கும் குறிப்பிடத்தக்க கல்வி வாய்ப்புகளை கண்டறிய EducationUSA கண்காட்சிகள் ஒரு சிறந்த வாய்ப்பாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கலைத் துறைகளில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது உதவும்" என்கிறார்.

"இந்த கண்காட்சிகள் பரந்த அளவிலான அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கும், கல்லூரி விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறைகள் குறித்து அறிவதற்கும் இது வாய்ப்பாக இருக்கும். மாணவர் சேர்க்கை, உதவித்தொகை போன்ற பலவற்றைப் பற்றி நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம். அமெரிக்காவில் படிக்கும் கனவை நனவாக்க தேவையான அனைத்து தகவல்களையும் ஆதரவையும் வழங்குவதே எங்கள் குறிக்கோள்" எனவும் கார்செட்டி கூறினார்.

ஆகஸ்ட் 16-ம் தேதி ஹைதராபாத், ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னை, ஆகஸ்ட் 18-ம் தேதி பெங்களூர், ஆகஸ்ட் 19-ம் தேதி கொல்கத்தா, ஆகஸ்ட் 21-ம் தேதி அகமதாபாத், ஆகஸ்ட் 22-ம் தேதி புனே, ஆகஸ்ட் 24-ம் தேதி மும்பை, ஆகஸ்ட் 25-ம் தேதி புது தில்லி என 8 நகர்ங்களில் எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA) கண்காட்சி நடைபெறும். ஒவ்வொரு நிகழ்வும் அந்தந்த நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் நடைபெறும். நேரமும் நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

இந்தக் கல்விக் கண்காட்சி பற்றி விரிவான தகவல்களை அறிய, https://educationusa.state.gov/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?

click me!