கிராம உதவியாளர், தலையாரி பணிக்கு தேர்வு.! ராமநாதபுரத்தில் தேர்வு நடைபெறும் இடம் எது.?மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Dec 2, 2022, 10:14 AM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராமநாபுரம் மாவட்டத்தில்,  50 கிராம உதவியாளர்கள் மற்றும் தலையாரி பணியிடங்களுக்கு  நாளை மறுநாள் (4ம் தேதி) ஞாயிறுக்கிழமை தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


கிராம உதவியாளர் தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து  டிச.4 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில், காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் மற்றும் தலையாரி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் தாலுக்காகளில் 50 கிராம உதவியாளர்கள், தலையாரி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே கிராம உதவியாளர் தேர்வு, தலையாரி பணிக்கு திறனறி எழுத்து தேர்வு நாளை மறுநாள்  (4.12.22) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு… மதிப்பெண்கள் குறித்து முழு விவரம் உள்ளே!!

ஆன்லைனில் விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பித்த தேர்வர்கள்  தேர்விற்கான ஹால் டிக்கேட் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அவரவர் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பட்டுள்ளதாகவும் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதே போல  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையம் எது.?

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்வு மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி  ராமநாதபுரத்தில்  உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாடானை சின்ன கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி, ராஜசிங்க மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  ஆகிய இடங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

click me!