மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்த யூஜிசியின் அறிவிப்கை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்து விளக்கம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) வெளியிட்ட அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களை ரத்து செய்வதற்கான (De-Reservation) வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.
undefined
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்த யூஜிசியின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சகம் யுஜிசி அறிவிப்பை மறுத்து விளக்கம் கொடுத்திருக்கிறது.
மதுரை கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தடபுடலான அன்னதானம்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் கீழ் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமன இட ஒதுக்கீடு தொடர்பாக 2019 சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றவும், அந்த சட்டத்தின் அடிப்படையிலேயே காலி பணியிடங்களை நிரப்புவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது
கல்வி அமைச்சகத்தின் பதிவைப் பகிர்ந்துள்ள யூ.ஜி.சி. தலைவர், "உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புவது முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு நீக்கம் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி நினைவு நாளில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு