தேர்வு கிடையாது.. HAL நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு அரியவாய்ப்பு!

By Ramya s  |  First Published May 15, 2023, 3:27 PM IST

HAL நிறுவனம் 328 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்படும் HAL நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Engineering Graduate Apprentice, Technician Diplomo Apprentice, ITI Trade Apprentice ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 328 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பி.இ, பி.எஸ்.சி, டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : மோடி அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறதா? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?

இந்த பணிக்கு எந்த தேர்வும் கிடையாது. நேர்காணல் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 17.05.2023, 18.05.2023, 19.05.2023, 23.05.2023, 27.05.2023 மற்றும் 25.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் உள்ள ஐபிஎம் ஊழியர்.. தனது நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

click me!