தொழில்முறையில் மீன் வளர்க்க மத்திய அரசின் மானியம் பெறுவது எப்படி?

Published : May 15, 2023, 02:25 PM ISTUpdated : May 15, 2023, 02:28 PM IST
தொழில்முறையில் மீன் வளர்க்க மத்திய அரசின் மானியம் பெறுவது எப்படி?

சுருக்கம்

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் மூலம் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என் காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மானியம் பெறுவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீலாங்கரையில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தின் மூலம் மீன்வள மேம்பாட்டு திட்டங்களின் பலனைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் வாங்க, பொதுப்பிரிவினருக்கு ஒரு அலகிற்கு 40% மானியம் மானியமும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியமும் வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்புக்கு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

புதுச்சேரியில் தொழிலதிபருக்கு கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்!

மீன் விற்பனை அங்காடி, மீன் அருங்காட்சியகம் போன்றவற்றைத் தொடங்க ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதமும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீதமும் மானியம் கொடுக்கப்படுகிறது. இதேபோல,அலங்கார மீன் வளர்ப்பு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீதம் மானியம் பெறலாம்.

புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் கொடுகப்பப்படும். ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் கிடைக்கும்.  நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4. லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேருக்கு 40% மானியம் பொதுப்பிரிவினருக்கும் மற்றும் 60% மானியம் ஆதிதிராவிடர் மகளிருக்கும் கிடைக்கும். சிறிய பயோபிளாக் குளங்களில் மீன் வளர்க்க ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம். ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம்.

நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்து நன்னீர் மீன் வளர்க்க ஒரு அலகிற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.  குளிர்காப்பிடப்பட்ட பெட்டியுடன் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.73 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு அலகிற்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.

மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now