விரைவில் நடைபெற உள்ள எஸ்.ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரத்தை இங்கு காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், காவல் துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு, 621 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 20 பூர்த்தியடைந்தவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகள் மே15 ஆம் தேதி துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044- 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் பங்கேற்று பயனடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் எஸ்.ஐ காவல்துறை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க..இந்து சமய அறநிலையத் துறையில் சூப்பர் வேலை.. முழு விபரம்