சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.
கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 12 ஆம் வகுப்புக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை தவிர்க்க தகுதிப் பட்டியல் மற்றும் பிரிவு வாரியான மதிப்பெண்களை வெளியிட மாட்டோம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது.
தகுதிப் பட்டியலை நீக்கவும், மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவை வழங்கும் நடைமுறையை நீக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 0.1 சதவீத மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தகுதிச் சான்றிதழை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 87.33 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5, 2023 வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் சுமார் 16,96,770 மாணவர்கள் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க..இந்து சமய அறநிலையத் துறையில் சூப்பர் வேலை.. முழு விபரம்
மாணவர்கள் 'results.cbse.nic.in', 'cbseresults.nic.in' மற்றும் 'digilocker.gov.in' ஆகிய இணையதளங்களில் தங்களின் ரோல் எண், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐடி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கலாம். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஏதேனும் ஒன்றில் உள்நுழைய வேண்டும்.
பிறகு திறக்கும் பக்கம் அவர்களின் ரோல் எண், அட்மிட் கார்டு ஐடி மற்றும் பள்ளி எண்ணை உள்ளிடும்படி கேட்கும். சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, முடிவு திரையில் தோன்றும் ஒருமுறை காட்டப்பட்ட முடிவை மாணவர்களின் வசதிக்காக பதிவிறக்கம் செய்யலாம்.
இதையும் படிங்க..தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம்