SSC-ல் வேலைவாய்ப்பு... 12வது படித்திருந்தால் போதும்... உடனே விண்ணப்பியுங்கள்!!

By Narendran S  |  First Published May 11, 2023, 9:05 PM IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பணி: 

  • Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)
  • Data Entry Operator (DEO)
  • Data Entry Operator, Grade ‘A’

காலிப்பணியிடங்கள்: 

  • மொத்தம் -  1,600

கல்வித்தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இதையும் படிங்க: தொடக்க கல்வி பட்டய தேர்வு.. இன்னும் 3 நாட்களே உள்ளது.. உடனே அப்ளை பண்ணுங்க..

சம்பள விவரம்:

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) - Pay Level-2 ரூ.19,900 - ரூ. 63,200
  • Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 - ரூ.81,100 மற்றும்  Level-5 ரூ.29,200 - ரூ.92,300 
  • Data Entry Operator, Grade ‘A’-Pay Level-4- ரூ. 25,500 - ரூ.81,100 

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு 18  வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

  • இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். 
  • ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். 
  • பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CRPF-ல் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே

தேர்வு செய்யும் முறை: 

  • இதற்கு கம்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும். 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்ய வேண்டும்.
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

  • 08.06.2023 
click me!