
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 1377 ஆசிரியரல்லா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 30, 2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரம் :
பெண் பணியாளர் செவிலியர் காலியிடங்கள் : 121
கல்வித்தகுதி : பி.எஸ்.சி நர்சிங், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2.5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 44,900 - 1,42,400
உதவி பிரிவு அலுவலர் காலியிடங்கள் : 05
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்.
மத்திய அரசின் கீழ் உள்ள மத்திய அரசு/தன்னாட்சி அமைப்புகளில் நிர்வாக மற்றும் நிதி விஷயங்களில் 3 வருட அனுபவம். பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் சி.இ.ஓ வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க...
தணிக்கை உதவியாளர் காலியிடங்கள் : 12
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்திருக்க வேண்டும். அரசு/அரை அரசு/ தன்னாட்சி நிறுவனங்களில் கணக்குப் பணியில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400
ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி காலியிடங்கள் : 04
கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400
சட்ட உதவியாளர் காலியிடங்கள் : 01
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம். பெற்றிருக்க வேண்டும். அரசுத் துறை/ தன்னாட்சி அமைப்புகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் சட்ட வழக்குகளைக் கையாள்வதில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 - 1,12,400
ஸ்டெனோகிராபர் காலியிடங்கள் : 23
கல்வித்தகுதி 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500 - 81,100
கணினி ஆபரேட்டர் காலியிடங்கள் : 2
கல்வித்தகுதி : பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500 - 81,100
கேட்டரிங் மேற்பார்வையாளர் காலியிடங்கள் : 78
கல்வித்தகுதி : ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,500 - 81,100
இளநிலை செயலக உதவியாளர் காலியிடங்கள் : 21
12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900 - 63,200
ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் : 161
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக நுட்பத்தில் சான்றிதழ்/டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000 - 56,900
எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் காலியிடங்கள் : 128
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் நிறுவல்/வயரிங்/பிளம்பிங்கில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மெஸ் உதவியாளர் காலியிடங்கள் : 442
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி உடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000 - 56,900
மல்டி டாஸ்கிங் காலியிடங்கள் : 19
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி உடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 18,000 – 56,900
தேர்வு முறை :
ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://navodaya.gov.in/nvs/en/Home1 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.