Teachers Recruitment Board : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது காலியாக இருக்கின்ற 4000 உதவி பேராசிரியர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் முறையில் 4000 காலி பணியிடங்களை நிரப்ப இப்பொது அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி விவரம்
undefined
உதவி பேராசிரியர் அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள்.
சம்பள விவரம்
ரூபாய் 57,700 முதல் 1,82,400 வரை
முக்கியமான தேதிகள்
இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியான நாள் 14.03.2024, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க துவங்கும் நாள் 28.03.2024, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 29.04.2024. தேர்வு நடைபெறும் நாள் 04.08.2024.
பாடப்பிரிவுகள்
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் மற்றும் பல படங்களுக்கான உதவி பேராசிரியருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மதிப்பெண் அளவு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள், தங்கள் துறை சார்ந்த படங்களில், முதுகலைபட்டயபடிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றுருக்க வேண்டும். அதே போல ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் அல்லாதோர் தங்கள் துறை சார்ந்த படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் விவரம் அறிய..
trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த காலி பணியிடம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
TNPSC Group 2A Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க...