டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் நீண்டநாள் கவலை காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்ததுள்ளது. இதன் மூலம் நேர்காணல் இல்லாமல் 5,990 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேர்முகத் தேர்வு அல்லாத 5,990 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2ஏ தேர்வில் 161 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு கொண்டவை. 5,990 பணியிடங்ஙள் நேர்முகத் தேர்வு அல்லாத இடங்கள். இதில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானாலும் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியல் வெளியாகாமல் இருந்தது. இது குறித்து தேர்வர்கள் நீண்ட நாட்களாக கவலை தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்ததுள்ளது.
undefined
https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மதிப்பெண், தரவரிசைப் பட்டியலைக் காணலாம். அல்லது கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசுத் துறைகளில் உள்ள 6,151 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தனர். சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் இந்த் தேர்வு நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டன. ஆனால், குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இன்று அவை வெளியிடப்பட்டுள்ளன.
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்; ஆக்ராவில் அவலச் சம்பவம்