ரூ.58,000 வரை சம்பளம்.. 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மருதமலை முருகன் கோயில் வேலைவாய்ப்பு..

By Ramya s  |  First Published Apr 2, 2024, 9:49 AM IST

மருதமலை முருகன் கோயிலில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 5-ம் தேதி கடைசி நாளாகும்.


கோவை மாவட்டம் பேரூர் அருகே பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலில் இருக்கும் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், ஓட்டுநர், பிளம்பர் - பம்ப் ஆப்பரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பஸ் கிளீனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

தகுதியான விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 05, 2024 கடைசி தேதி ஆகும். இன்னும் 3 நாட்களே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Tap to resize

Latest Videos

undefined

2024 டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலை. இணையதளத்தில் ரிசல்ட்டை செக் பண்ணுங்க!

மொத்த காலியிட எண்ணிக்கை: 21

பணியிடம்: கோவை

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

காலியிட விவரம்

டிக்கெட் விற்பனை எழுத்தர் – 01 காலியிடம்
அலுவலக உதவியாளர் - 02 காலியிடங்கள்
வாட்ச்மேன் - 04 காலியிடங்கள்
திருவலகு – 02 காலியிடங்கள்
விடுதி மேற்பார்வையாளர் - 01 காலியிடம்
பல வேலை – 01 காலியிடம்
டிரைவர் - 05 காலியிடம்
பிளம்பர் - பம்ப் ஆபரேட்டர் - 01 காலியிடம்
உதவி எலக்ட்ரீசியன் - 01 காலியிடம்
மினி பஸ் கிளீனர் - 01 காலியிடம்
வாட்ச்மேன் - 01 காலியிடம்
திருவலகு – 01 காலியிடம்.

கல்வித்தகுதி

டிக்கெட் விற்பனை எழுத்தர் பணிக்கு  - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு - 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாட்ச்மேன் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விடுதி மேற்பார்வையாளர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 1 வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.

IPPB Recruitment 2024 : டிகிரி படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல்துறை வங்கியில் வேலை..

பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் பணிக்கு (1) அரசு / அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் டிரேடில் ஐ.டி.ஐ.சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட அனுபவம் அல்லது 2 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவி எலக்ட்ரீஷியன் - பணிக்கு எலக்ட்ரிக்கல்/வயர்மேன் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டில் இருந்து "எச்" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மினி பஸ் கிளீனர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  மோட்டார் வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம் :

டிக்கெட் விற்பனை எழுத்தர் பணிக்கு ரூ.18500 முதல் 58600 வரை. மற்ற பணிகளின் தன்மைக்கேற்ப சம்பளம் மாறுபடும்.

வயது வரம்பு : 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை :

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முக தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை - 641046

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 05.04.2024

click me!