மத்திய சிறு குறு நிறுவனங்கள் துறையில் வேலை! சொளையா ரூ.60,000 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

By SG Balan  |  First Published Mar 26, 2024, 11:55 PM IST

இளம் தொழில் வல்லுநர் பணிக்கு மாதச் சம்பளம் ரூ.60,000 கொடுக்கப்படும். 2 ஆண்டு ஒப்பந்தம் முடிந்த பின்பும் தேவை மற்றும் செயல்திறனைப் பொறுத்து, 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது


மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மேம்பாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மத்திய அரசின் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பிரிவில் 93 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளம் தொழில் வல்லுனர்களின் ஆட்சேர்ப்பு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

2 ஆண்டு ஒப்பந்தம் முடிந்த பின்பும் தேவை மற்றும் செயல்திறனைப் பொறுத்து, 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது. இந்த வேலையில் சேர விரும்புகிறவர்கள் hqrs@dcmsme.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சுயவிவரத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

நீட் ரத்து மனுக்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்களா அதை ரத்து செய்வார்கள்?: எடப்பாடி பழனிச்சாமி

கல்வித்தகுதி:

மனிதநேயம் அல்லது பொறியியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி அல்லது எம்சிஏவில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிச் பேசினால், அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மென்பொருள் சேகரிப்பு செயல்முறை, நிரலாக்கம், பயன்பாட்டு மேம்பாடு போன்றவற்றில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம்.

ஊதியம்:

இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு மாதம் ரூ.60,000 சம்பளம் கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் சேவை திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்களின் ஒப்பந்தம் பாதியிலேயே நிறுத்தப்படும் எனபதும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

அப்படி நேர்ந்தால் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு ஒரு மாதம் முன்பு அறிக்கை அளிக்கப்படும். பணியில் சேர்ந்த பின்பும் வேலையை விட்டு வெளியேற விரும்பினாலும் ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://dcmsme.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்யலாம்.

விதவிதமாக பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்! கேரளக் கோவிலில் வினோத வழிபாடு!

click me!