அரசு வேலை வேண்டுமா? காவல்துறையில் 4,187 பணியிடங்கள்.. போலீஸ் வேலையில் சேர வாய்ப்பு.. முழு விபரம் இதோ !!

By Raghupati R  |  First Published Mar 24, 2024, 9:03 AM IST

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள் தேர்வுக்கான சப்-இன்ஸ்பெக்டருக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டு டெல்லி காவல் மற்றும் மத்திய ஆயுதப் படைத் தேர்வில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செயல்முறைக்கு SSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகளில் 4187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest Videos

undefined

பணி விவரங்கள்

டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸ்.)-ஆண்: 125
டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸ்.)-பெண்: 61
CAPF களில் சப்-இன்ஸ்பெக்டர் (GD): 4001
மொத்த காலியிடங்கள்: 4187.

விண்ணப்பக் கட்டணம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இருப்பினும், இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பணியிட விவரங்கள் குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்.. தூத்துக்குடி வெள்ளம்.. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அசால்ட்டாக இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம்..

click me!