குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள்.. குரூப் 2 ஏ தரவரிசை எப்போது வெளியிடப்படும் தெரியுமா?

By Raghupati RFirst Published Mar 20, 2024, 1:43 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தரவரிசை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) 116 காலி பணியிடத்துக்கும், குரூப்-2ஏ பதவியில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) 5,990 இடங்கள் என 6,151 காலி பணியிங்களுக்கான தேர்வை நடத்தியது. இப்பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 பதவியில் அடங்கிய பதவிகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுக்கான வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் 327 பேரின் நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் விவரங்களுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவலில், நேர்முகத் தேர்வு பதவிகளில் நிரப்பப்படாமல் உள்ள 29 காலிப்பணியிடங்களுக்காக மேற்குறிப்பிட்ட தேர்வர்கள் தங்களது விருப்பத்தினைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 3 நாட்கள் வழங்கப்படும். 

தகுதியான தேர்வர்களுக்கு மேற்படி விருப்பம் தொடர்பான தகவல் அத்தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் மற்றும் அவர்கள் தங்களது விருப்பத்தினை ஒருமுறை பதிவு மூலம் தெரிவிக்கலாம். மேலும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசையானது இறுதி கட்ட நேர்முகத் தேர்வு ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என்றும் கூறப்படுகிறது.

சீக்கிரமா ஆபிஸ் போக இருபாலருக்கும் ஏற்ற டூ வீலர் .. பெட்ரோல் அதிகம் குடிக்காத 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்..

click me!