மெட்டா நிறுவனம் அடுத்த வாரம் 6000 பேரை பணியில் இருந்து நீக்குகிறது!!

By Dhanalakshmi G  |  First Published May 19, 2023, 3:03 PM IST

மெட்டா நிறுவனம் அடுத்த வாரம் சுமார் 6000 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது.


மெட்டா நிறுவனத்தின் உலக விவகாரத் தலைவர் நிக் கிளெக் இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக வோக்ஸ் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பில் இந்த தகவலை நிக் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மே மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் வேலையிழப்பு இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிகாரபூர்வமற்ற இணையதள தகவலும் கசிந்துள்ளது.

தற்போது கசிந்து இருக்கும் தகவலின்படி, அடுத்த வாரத்தில் சுமார் 6000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதாவது லே ஆப்கிடையாது. வீட்டுக்கு அனுப்பபடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்தாண்டில் நவம்பர் மாதம் 11,000  பேரை பணியில் இருந்து தூக்கி இருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து 10,000 பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் தான் மெட்டா. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 4,000 பேரை வீட்டுக்கு அனுப்பி இருந்தது. அப்படியென்றால், அவர்களது அறிவிப்பின்படி, இன்னும் 6,000 பேர் அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

Tap to resize

Latest Videos

ASRB வேலைவாய்ப்பு.. 260 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க எப்போது கடைசி தேதி?

“மூன்றாவது அலை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இது வர்த்தகப் பிரிவில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. இது மிகுந்த கவலை மற்றும் நிச்சயமற்ற காலமாக இருக்கிறது...இந்த தருணத்தில் ஆறுதல் வழங்க சில எளிய வழியை கண்டறிய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அதுவும் நிச்சயமற்றதாக இருக்கிறது. உண்மையில், எல்லோரும் அந்த நிச்சயமற்ற தன்மையைப் பொருட்படுத்தாமல், தொழில் திறமையை வெளிப்படுத்தி வருகிறீர்கள்” என்று நிக் கிளெக் மேலும் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் குறித்து, விரைவில், ஊழியர்களுக்கு மெட்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் லே ஆப் குறித்த தகவலை மெயில் வாயிலாக அனுப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மெயிலில் எந்த துறையில் இருப்பவர்கள், யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவல் இடம் பெறுமாம். பின்னர், இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்க உத்தரவு பறக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 2023: விண்ணப்பத்தார் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...!!

தற்போது வரை, வீட்டுக்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மெட்டா இழப்பீடு வழங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மெட்டா ஏன் இத்தனை பேரை வேலையில் இருந்து நீக்குகிறது? என்ற கேள்வியும் எழலாம்.

இதற்கான காரணங்களை முன்பே மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கியுள்ளார். ஒன்று பொருளாதார சரிவு மற்றொன்று மெதுவான வளர்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக, நிறுவனம் குறைந்த வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டுகளில்  தேவை இருந்ததால், அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தி இருந்ததாகவும் மெட்டா தெரிவித்து இருந்தது. தற்போது வருமானம் குறைந்து, வர்த்தகமும் மந்தமாகி இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

click me!