தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் 3,60, 908 மாணவர்களும், 4,12,779 மாணவியர் உள்ளிட்ட மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 24-ம் தேதியே தொடங்கப்பட்டது. மே 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்படப்பட்டது. அதில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.36%, மாணவர்கள் 88.99% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர்கள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. திருப்பூர் - 96.38%, ஈரோடு - 96.18%, கோவை - 95.73%, நாமக்கல் - 95.60%, தூத்துக்குடி - 95.43% இடம்பெற்றுள்ளது.