10ம் வகுப்பு தேர்வில் இவ்வளவு பேர் தோல்வியா? துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியானது..!

By vinoth kumar  |  First Published May 19, 2023, 1:28 PM IST

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதன்படி, இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 10-ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியான நிலையில் சுமார் 78,706 பேர் தோல்வியடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதன்படி, இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 10-ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- TN Class 10th Results 2023: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! அசத்திய மாணவிகள்! மாணவர்கள் நிலை என்ன?

சுமார்  9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில், தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புக்கு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் முதலிடம்.. கடைசி இடத்தில் எந்த மாவட்டம்?

click me!