TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. போட்டித் தேர்வர்களே உஷார் !

Published : Jul 19, 2022, 04:28 PM ISTUpdated : Jul 19, 2022, 04:47 PM IST
TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. போட்டித் தேர்வர்களே உஷார் !

சுருக்கம்

வரும் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் குரூப் 2 & 2A தேர்வின் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அடுத்த கட்ட முதன்மை தேர்வர்கள் அனைவரும் முதல் நிலை தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து வரும் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி  (TNPSC) குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமாக 7,382 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம்... கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

அடுத்ததாக அரசு துறையில் காலியாக உள்ள 25 கணக்கு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வந்துள்ளது.  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

சட்டம், ஒழுங்கு பிரச்சனையால் தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகத் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்வுக்குகூட நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now