10, +2 படித்தவர்களா நீங்கள் ? இந்திய ராணுவத்தில் அருமையான வேலைவாய்ப்பு.!!

By Raghupati R  |  First Published Jul 19, 2022, 3:48 PM IST

இந்திய ராணுவத்தில் 2022ம் ஆண்டுக்கான குரூப் சி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ராணுவ பதவிகளுக்காக பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இது சூப்பரான வாய்ப்பு. இதை மிஸ் பண்ணிடாதீங்க. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதுவும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்களும் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேசத் தலைமையகத்தில் உள்ள அரசு வேலை தேடும் நபர்களுக்கான காலியிடங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

குரூப் C யின் 88 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும். வார்டு உதவியாளர் பணிக்கு 84 இடங்களும், சமையலர் பணிக்கு 4 இடங்களும் காலியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் ஆஃப்லைன் முறையில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.  மொத்தமுள்ள 88 பதவிகளில் 43 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாதவை. SC-க்கு 6, ST-க்கு 6, OBC-க்கு 15, ஈடபிள்யூஎஸ் க்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம்... கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சமையற்காரர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். மேலும், விண்ணப்பதாரருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மருத்துவச்சியாக குறைந்தது மூன்று வருட அனுபவம் பெயற்றிருக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப படிவம் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை "HQ Central Command (B00-1), Military Hospital Jabalpur Madhya Pradesh - 482001" என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ தளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

click me!