மாதம் ரூ.62,000 சம்பளம்.. ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு !

Published : Jul 20, 2022, 04:59 PM IST
மாதம் ரூ.62,000 சம்பளம்.. ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு !

சுருக்கம்

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பதிவுரு எழுத்தர் , அலுவலக உதவியாளர் ,இரவு காவலர் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம்... கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தியடைந்த்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம். தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி தொடர்பான தகவல்கள் பற்றி அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!
Job Alert: சமைக்க தெரிந்தால் போதும்.! ரூ.70,000 மாத சம்பளம் கிடைக்கும்.!