
இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
Stenographer Grade II, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கு மொத்தம் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Indian Army Infantry School |
| பணியின் பெயர் | Stenographer Grade II, Lower Division Clerk and other |
| பணியிடங்கள் | 65 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.07.2022 |
| விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்லமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதனது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000 முதல் ரூ.81,000 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.07.2022 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.