Job Vacancy: சேதிய கேட்டீங்களா.?! 10th முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.60,000 சம்பளத்துடன் அரசுவேலை.!

Published : Dec 26, 2025, 07:00 AM IST
Job vacancy

சுருக்கம்

தமிழ்நாடு கால்நடை மற்றும் மிருக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 60 நிரந்தர Non-Teaching பணியிடங்களை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் வரை படித்தவர்கள் Assistant, Driver, Specialist போன்ற பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TANUVAS Recruitment 2026 – 60 Non-Teaching பணியிடங்கள் 

தமிழ்நாடு கால்நடை மற்றும் மிருக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) 2026-ஆம் ஆண்டிற்கான Non-Teaching பணியிடங்கள் 60 ஐ நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Assistant, Stenographer Grade–III, Driver, Farm Manager, Programme Assistant, Skilled Support Staff – I மற்றும் பல Subject Matter Specialist பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் நிரந்தர அரசு பணியிடங்கள் ஆகும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TANUVAS அதிகாரப்பூர்வ இணையதளமான tanuvas.ac.in-ல் இருந்து விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, ஆஃப்லைன் முறையில் அனுப்ப வேண்டும்.

மொத்தம் 60 காலியிடங்கள், சென்னையில் வேலை

இந்த TANUVAS வேலைவாய்ப்பில் மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளன. இதில் Animal Science, Agronomy, Horticulture, Soil Science, Home / Community Science, Fisheries போன்ற துறைகளில் Subject Matter Specialist பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் Programme Assistant (Computer & Lab Technician), Farm Manager, Assistant, Stenographer, Driver மற்றும் Skilled Support Staff – I ஆகிய பணிகளுக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடம் முழுவதும் சென்னை ஆகும்.

10th முதல் டிகிரி வரை

பணியிடங்களுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Subject Matter Specialist பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டம் அவசியம். Programme Assistant பணிகளுக்கு கணினி அறிவியல் அல்லது வேளாண்மை சார்ந்த பட்டங்கள் தேவை. Assistant பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் போதுமானது. Stenographer பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். Driver பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை. Skilled Support Staff – I பணிக்கு 10-ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி போதுமானதாகும்.

வயது வரம்பு இதுதான்

இந்த TANUVAS Recruitment 2026-க்கு 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு, OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு என அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் கூடுதல் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு ஊதிய நிலைப்படி சம்பளம் வழங்கப்படும். Subject Matter Specialist பணிக்கு Level-10 (₹56,100 – ₹1,77,500) வரை சம்பளம் வழங்கப்படுகிறது. Programme Assistant, Farm Manager, Assistant பணிகளுக்கு Level-6, Driver பணிக்கு Level-3, Skilled Support Staff – I பணிக்கு Level-1 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம், முக்கிய தேதிகள் விவரம் 

விண்ணப்ப கட்டணமாக SC/ST விண்ணப்பதாரர்கள் ₹250 மற்றும் பிற பிரிவினர் ₹500 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தேவையான சான்றிதழ்கள் மற்றும் கட்டண விவரங்களுடன் 12.01.2026 மாலை 5.00 மணிக்குள் TANUVAS நிர்ணயித்த முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு TANUVAS Recruitment 2026 ஒரு சிறந்த மற்றும் நிலையான வேலைவாய்ப்பாக அமையும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Free Training: உங்கள் எதிர்காலத்தை மாற்றும் இலவச ஓட்டுனர் பயிற்சி.! உணவு, சீருடை, எல்லாமே FREE.! இன்னும் என்ன வேணும்?
Job Alert: படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாருக்கும் செம சான்ஸ்! ரூ.48,000 சம்பளத்துடன் அரசு வேலை.!