
வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தேர்வெழுதி முடிவுகளுக்காகக் காத்திருந்த தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) அமைப்பு, RRB PO முதல்நிலைத் தேர்வு (Prelims) முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களின் முடிவுகளை இணையதளத்தில் உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான இந்த IBPS RRB PO முதல்நிலைத் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டன. தற்போது இதற்கான முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் (Scorecard) வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வுக்கு (Mains) தகுதி பெறுவார்கள்.
தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை (Scorecard PDF) பதிவிறக்கம் செய்யக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
1. முதலில் IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையளமான ibps.in-க்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'IBPS RRB PO Prelims result 2025' என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
3. அது உங்களை லாகின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
4. அங்கு உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிடவும்.
5. திரையில் தோன்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டைப் பதிவு செய்து 'Login' கொடுக்கவும்.
6. தற்போது உங்கள் ஸ்கோர் கார்டு திரையில் தோன்றும். அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இந்தத் தேர்வு நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) காலியாக உள்ள குரூப் A அதிகாரிகள் (Scale-I, II & III) மற்றும் குரூப் B அலுவலக உதவியாளர்கள் (Office Assistants) என மொத்தம் 3,900-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்குத் தேர்வர்கள் ibps.in இணையதளத்தைப் பார்வையிடலாம்.