Job Vacancy: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! டிகிரி இருந்தா போதும்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Published : Dec 22, 2025, 06:33 AM IST
December 2025 Government Jobs UIIC

சுருக்கம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (UIIC) ஆம் ஆண்டிற்கான 153 பயிற்சி பணியாளர் பணியிடங்களை அறிவித்துள்ளது, இதில் தமிழ்நாட்டிற்கு 19 இடங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வு இல்லாமல், இளங்கலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 

டிகிரி இருந்தா போதும்.! கைநிறைய சம்பளம் வாங்கலாம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (UIIC) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான Apprentice (பயிற்சி பணியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா முழுவதும் 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி மற்றும் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணியின் விவரம், கல்வித் தகுதி

இந்த வேலைவாய்ப்பு Apprentice பதவிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் நிரந்தர பணியாளர்கள் அல்ல; பயிற்சி காலத்தில் நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுபவம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். 2021, 2022, 2023, 2024 அல்லது 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி,

01.12.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி, SC / ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள்.

மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊக்கத்தொகை (Stipend), தேர்வு முறை

பயிற்சி காலத்தில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.9,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை. இளங்கலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டும் பெறப்படும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:  https://nats.education.gov.in/

விண்ணப்பிக்க கடைசி தேதி

20.01.2026

எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறுவதால், பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அரசு நிறுவன அனுபவம் பெற விரும்புவோர் உடனே விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் சென்னை மாநகராட்சி.! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் அட்டகாசமான வாய்ப்பு.!
சம்பளம் பத்தலையா? பாஸ் கிட்ட கேட்க பயமா? கவலையை விடுங்க.. உங்களுக்காக வாதாட வந்தாச்சு AI!