இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி:
கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks)
காலிப்பணியிடங்கள்:
மொத்தம்: 40,899 பணியிடங்கள்
தமிழ்நாடு: 3,167 பணியிடங்கள்
தேர்வு செய்யும் முறை:
இந்தக் காலிபணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கணினி உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள்.
பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று Registration என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப்பெற வேண்டும்.
பின்னர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம்.
எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.