தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு... ரூ.71,000 வரை சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி?

By Narendran S  |  First Published Feb 9, 2023, 12:07 AM IST

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பதவி:

  •  சாலை ஆய்வாளர் 

காலிப்பணியிடங்கள்: 

  • 761

இதையும் படிங்க: கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் புதிய தோற்றம்... பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

கல்வித் தகுதி: 

  • அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • Civil Draughtmenship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 
  • ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

சம்பள விவரம்: 

  • ரூ.19, 500 முதல் ரூ. 71,900 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

இதையும் படிங்க: வேலூரில் காவல் ஆய்வாளர் உட்பட 12 போலீசார் கூண்டோடு மாற்றம்... குற்றங்களை கட்டுப்படுத்தாததால் அதிரடி நடவடிக்கை!

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

  • 11.02.2023
click me!