மத்திய அரசின் EPFO-ல் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Mar 9, 2023, 9:48 PM IST

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (EPFO)-வில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (EPFO)-வில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவி: 

  • அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer)
  • உதவி நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner)

காலிப்பணியிடங்கள்: 

  • அமலாக்க அதிகாரி – 418
  • உதவி நிதி ஆணையர் - 159 

மொத்தம் - 577 

இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer):

சம்பளம்:

  • 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

  • ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner):

சம்பளம்:

  • 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • company Law, Labour Law, public Administration பாடங்களில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: 

  • எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

விண்ணப்பக் கட்டணம்: 

  • ரூ.25. இதனை எஸ்பிஐ வங்கி ஆன்லைன் மூலம் செலுத்தவும். 
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 

  • www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி நாள்: 

  • 17.03.2023 
click me!