JEE Main 2023 : திட்டமிட்டபடி ஜே.இ.இ முதன்மை தேர்வு நடக்குமா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?

By Raghupati R  |  First Published Dec 28, 2022, 4:14 PM IST

ஜே.இ.இ முதன்மை தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகிறது.

ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023 அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ, ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கான முழு தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.இ.இ முதன்மை தேர்வுத் தேதியை ஏப்ரல் மதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Tap to resize

Latest Videos

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

தேர்வுக்கு முன்னதாக, தேர்வு தேதிகளை ஒத்திவைக்க மற்றும் ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான தகுதிகளை மறுபரிசீலனை செய்ய மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பார் அண்ட் பெஞ்ச் செய்தி அறிக்கையின்படி, ஒத்திவைக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான தகுதியின்படி, மேல்நிலைத் தேர்வில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, ஜே.இ.இ முதன்மை தேர்வு தேதிக்கான அறிவிப்பு குறுகிய அறிவிப்பில் செய்யப்பட்டது என்றும், இது 12 ஆம் வகுப்பு தேர்வுகளோடு ஒன்றாக வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநில வாரியங்கள் ஜனவரி மாதத்தில், தங்களின் ப்ரீ-போர்டு மற்றும் போர்டு தேர்வுகளை திட்டமிட்டுள்ளன. எனவே, மாணவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பது கடினமாகும். எனவே 2023 ஜனவரியில் திட்டமிடப்பட்ட முதன்மைத் தேர்வு அவர்களுக்கு பயனற்றது. ஏனெனில் அவர்கள் தேர்வுக்கு வரமாட்டார்கள் என்று பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

click me!