ரூ.30,000 சம்பளம்! டிகிரி இருந்தால் போதும்! இந்தியா போஸ்ட்டில் வேலை!

By Ramya s  |  First Published Oct 23, 2024, 4:12 PM IST

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி 344 கிராமின் டாக் சேவக் நிர்வாகி பதவிகளை நிரப்புகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.


இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) என்பது இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாகும், இது இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறைக்கு சொந்தமானது. இந்திய அஞ்சல் துறையில் உருவாகும் காலியிடங்களுக்கு அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதியான கிராமின் டாக் சேவக்களைத் தேர்ந்தெடுக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024 : முழு விவரம்

Tap to resize

Latest Videos

undefined

அமைப்பின் பெயர் :  இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்
தேர்வின் பெயர் : IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024
பதவியின் பெயர்  : நிர்வாகி 
துறையின் பெயர் கிராமின் டக் சேவக்
காலியிடம் : 344
வயது வரம்பு : 20-35 வயதுக்குள்
அதிகாரப்பூர்வ இணையதளம் : ippbonline.in.

IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024- முக்கியமான தேதிகள்

அறிவிப்பு வெளியீட்டு தேதி : அக்டோபர் 11, 2024
ஆன்லைனில் விண்ணப்ப செயல்முறை தொடக்கம் : அக்டோபர் 11, 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 அக்டோபர் 2024

BHEL job Vacancy: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு! 695 காலி பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

IPPB Executive Recruitment 2024க்கான நிர்வாகப் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது. . புதிய பயனர்களாக இருந்தால் முதலில் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு முடிந்ததும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் IPPB நிர்வாக விண்ணப்பப் படிவத்தை காலக்கெடுவிற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பூம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.750/- செலுத்த வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் (வழக்கமான / தொலைதூரக் கற்றல்) பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் தேவை

விண்ணப்பதாரர்கள் 01.09.2024 இன் படி அஞ்சல் துறையுடன் கிராமின் தாக் சேவக் ஆக குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IPPB நிர்வாகத் தேர்வு 2024 : செயல்முறை

IPPB எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024க்கான தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. விண்ணப்பதாரர் தங்கள் டிகிரியில் பெற்ற மதிப்பெண் அடிபடையில் தேர்வு செய்யப்படுவர். எனினும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அறீவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், அங்கு பணியிடங்களுக்கு அவர்களின் தகுதியை தீர்மானிக்க கூடுதல் மதிப்பீடுகள் நடத்தப்படும்.

மாதம் 1 லட்சம் சம்பளம்.. டிப்ளமோ படித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட் - உடனே அப்ளை பண்ணுங்க

IPPB எக்ஸிகியூட்டிவ் சம்பளம் 2024

ஐபிபிபி எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2024 மூலம் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத சம்பளமாக ரூ. 30,000/ வழங்கப்படும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியிடங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ippbonline.in./ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

click me!