சித்தா, ஓமியோபதி, யுனானி முதுநிலை படிப்பு படிக்க போறீங்களா?அப்படினா முக்கிய அறிவிப்பு இதோ!

By vinoth kumar  |  First Published Sep 7, 2024, 9:44 AM IST

தமிழ்நாட்டில் சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புக்கு அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிங்க: Monthly Pension Increase: குட்நியூஸ்! தமிழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

முழு விவரங்கள்:

* விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை ” www.tnhealth.tn.gov.in ”என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக தனித்தனியாக ஒவ்வொரு முதுநிலை பட்டப் படிப்பு/பிரிவிற்கும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 08.09.2024 முதல் 20.09.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு ” www.tnhealth.tn.gov.in ” என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 20.09.2024 மாலை 05.30 மணி வரை.

* விண்ணப்பதாரர்கள் எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106.

* தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு AIAPGET
2024–ல் பெற்ற மதிப்பெண்களின் {எம்.டி. (சித்தா)- AIAPGET (Siddha) - 2024,எம்.டி. (யுனானி)-AIAPGET (Unani) - 2024, மற்றும் எம்.டி. (ஓமியோபதி)-
AIAPGET (Homoeopahty) - 2024} அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:

1. எம்.டி. (சித்தா) - அரசு ஒதுக்கீட்டு இடங்கள் - OC, BC, BCM. MBC/DNC பிரிவினர்களுக்கு 3,000/-, SC, SCA & ST பிரிவினர்களுக்கு இல்லை

2. எம்.டி. (யுனானி) - அரசு ஒதுக்கீட்டு இடங்கள் OC, BC, BCM. MBC/DNC பிரிவினர்களுக்கு 3,000/-, SC, SCA & ST பிரிவினர்களுக்கு இல்லை

3. எம்.டி. (ஓமியோபதி) - அரசு ஒதுக்கீட்டு இடங்கள்- OC, BC, BCM. MBC/DNC பிரிவினர்களுக்கு 3,000/-, SC, SCA & ST பிரிவினர்களுக்கு இல்லை இல்லை

4. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் - OC, BC, BCM. MBC/DNC பிரிவினர்களுக்கு 1,000/, SC, SCA & ST பிரிவினர்களுக்கு 1,000/-.

5. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் - OC, BC, BCM. MBC/DNC பிரிவினர்களுக்கு 5,000/-, SC, SCA & ST பிரிவினர்களுக்கு 5,000/-

இதையும் படிங்க:  பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு! சர்ச்சையால் தூக்கி அடிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்! நடந்தது என்ன?

* விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.

* கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.

* கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

click me!