9 நகரங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் பிளிப்கார்ட்! முழு விவரம் இதோ!

By SG Balan  |  First Published Sep 5, 2024, 12:15 PM IST

பண்டிகைக் காலத்திற்குத் தயாராகும் வகையில் விநியோகச் சங்கிலி மற்றும் பணியாளர்களை எண்ணிக்கையை அதிகரிக்கும் பிளிப்கார்ட்டின் நடவடிக்கை அமேசான் (Amazon) போன்ற போட்டி நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.


ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) நாடு முழுவதும் 100,000 க்கும் மேற்பட்ட புதிய வேலைகளை உருவாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு 11 விநியோக மையங்களில் இந்த வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டின் சப்ளை செயின் உள்கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் வகையில் ஒன்பது நகரங்களில் மொத்தம் 1.3 மில்லியன் சதுர அடி பரப்பில் 11 மையங்கள் அமைய உள்ளன. இதன் மூலம் நிறுவனத்தின் விநியோக மையங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்கிறது. இந்த விரிவாக்கம் பண்டிகை கால விற்பனையின்போது ஏற்படும் தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பிளிப்கார்ட்டின் சப்ளை செயின் விரிவாக்கம் சரக்கு மேலாளர்கள், கிடங்கு அசோசியேட்ஸ், லாஜிஸ்டிக்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள், கிரானா பார்ட்னர்கள் மற்றும் டெலிவரி டிரைவர்கள் போன்ற பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு ஆர்டர்களைக் கையாளும் முறை குறித்து பயிற்சி அளிக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

21 மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா நைட்! கருப்பு தீம் கொண்ட வேற லெவல் டிசைன்!!

சப்ளை சங்கிலி நெட்வொர்க்கின் விரிவாக்கம் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது என ஃபிளிப்கார்ட்டின் மூத்த துணைத் தலைவரும் சப்ளை செயின் பிரிவின் தலைவருமான ஹேமந்த் பத்ரி தெரிவித்துள்ளார். "எங்கள் விரிவாக்கப்பட்ட விநியோக நெட்வொர்க்குடன், வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அவர்களுக்கு இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

தானியங்கி கிடங்குகள், தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்புகள் மூலம் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருவதாகவும் பிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

பண்டிகைக் காலத்திற்குத் தயாராகும் வகையில் விநியோகச் சங்கிலி மற்றும் பணியாளர்களை எண்ணிக்கையை அதிகரிக்கும் பிளிப்கார்ட்டின் நடவடிக்கை அமேசான் (Amazon) போன்ற போட்டி நிறுவனங்களுக்கும் Zepto, Blinkit மற்றும் Instamart போன்ற புதிய நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் சமீபத்தில் பிளிப்கார்ட் மினிட்ஸ் (Flipkart Minutes) என்ற பெயரில் புதிய துரித டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

செப் 30 க்குள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கும் திட்டங்கள்! இதை மிஸ் பண்ணாதீங்க!

ஓய்வூதியம் பெறும் EPS உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்! இனி எந்த வங்கியிலும் பென்ஷன் பெறலாம்!

click me!