AI தொல்லையில்லாத Skill Based Jobs! வேலைவாய்ப்புக்கு நிரந்தர உத்தரவாதம்!

By Dinesh TGFirst Published Aug 29, 2024, 4:28 PM IST
Highlights

சில வேலைகளை செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) மூலம் மாற்ற முடியாது. தேவையான திறன்கள் இருந்தால் மட்டுமே இந்த வேலைகளைச் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவால் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அந்த திறன் சார்ந்த வேலைகள் என்னவென்பதை இங்கு காணலாம்.
 

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. AI கருவிகள் பல பணிகளை எளிதாக்குகின்றன. அதனால்தான் அனைத்து துறைகளும் AI-யின் தாகம் அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த செயற்கை நுண்ணறிவால் பல வகையான பணிகளுக்கு மனித உதவியே தேவையில்லாமல் போகும் ஆபத்து ஏற்பட உள்ளது. மனித குலத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் சில நிபுணர்கள் எச்சரிது வருகின்றனர். ஆனால் AI எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், சில வேலைகளுக்கு திறன் சார்ந்த பணியாளர்கள் கட்டாயம். அவ்வகை வேலைகளிக்கு என்றும் AI அச்சுறுத்தல் இல்லை.

சில வேலைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்ற முடியாது. தேவையான திறன்கள் இருந்தால் மட்டுமே இந்த வேலைகளைச் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவால் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அந்த திறன் சார்ந்த வேலைகள் என்வென்பதை பார்ப்போம்.

விஞ்ஞானிகள்

சிந்தனை திறன் ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானது. இந்த திறமை மனித குலத்திற்கு மட்டுமே உள்ளது. எதையாவது சவால் விடுவதாயினும், அல்லது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதாக இருகட்டும் அது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். AI-க்கு இந்த திறன் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற வேலைகளில் AI உதவியாக இருக்குமே தவிர அவர்களது இடத்தை AI ஆட்கொள்ள வாய்ப்பு இல்லை.

வழக்கறிஞர்கள், நீதிபதிகள்

வழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்குகள், உண்மைகளை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்க வேண்டும். தவறுகள் குறித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். AI தொழில்நுட்பத்தில் இந்த அறிவு இல்லை. இதன் காரணமாக இந்த சட்டப் பணிகளுக்கு AI-யால் எந்த அச்சுறுத்தலும் இல்லை.

ஆய்வாளர்

AI தொழில்நுட்பம் பணிகளை எளிதாக்கும். புதிய அணுகுமுறைகளைக் காணலாம். ஆனால் உத்திகள் மற்றும் பகுப்பாய்வுகளை உருவாக்க, ஒருவர் மனித வளத்தை நம்பியிருக்க வேண்டும். மனிதர்களின் தொலைநோக்கு மற்றும் மாறுபட்ட சிந்தனைத் திறன்களை AI இன்னும் பெறவில்லை. ஆய்வாளராகப் பணியைத் தொடங்குபவர்களுக்கு AI தொழில்நுட்பத்தால் நஷ்டம் இல்லை. AI இந்த வேலைகளை மாற்றுவது கடினமாக இருக்கும்.

சிகிச்சையாளர் மற்றும் ஆலோசகர்

பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் ஆலோசகர்கள் பல்வேறு உடல் மற்றும் மன பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிகிச்சையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவர்களுடன் உணர்ச்சிப் பிணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த வேலையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், அதன் நோக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. AI தொழில்நுட்பம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், சிகிச்சையாளர் மற்றும் ஆலோசகரின் பணி எந்த அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாது. ஏனெனில் இந்த வேலை மனிதனை மனிதன் தொடுவதை உள்ளடக்கியது.

கலைத் தொழில்

கலை என்பது தனிமனித திறமை. எழுத்து, நடனம், பாட்டு, ஓவியம், நடிப்பு போன்ற கலைகளில் சிறந்து விளங்க மனித திறமை அவசியம். இவற்றை செயற்கை நுண்ணறிவால் மாற்ற முடியாது. இந்தக் கலைகளைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்து நல்ல திறமைகளை வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இந்தத் துறையில் AI-யின் பயன்பாடு பெயரளவுக்கு உள்ளது.

click me!