இந்தியன் வங்கியில் 300 காலியிடங்கள்; டிகிரி இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!

By Ramya s  |  First Published Aug 29, 2024, 11:10 AM IST

இந்தியன் வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா/தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் மொத்தம் 300 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 2, 2024 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் இருக்கும் காலியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான உள்ளூர் வங்கி அதிகாரிகளுக்கான (ஸ்கேல்-I) வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு/புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா/தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 300 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 13 தொடங்கிய நிலையில், செப்டம்பர் 2, 2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Tap to resize

Latest Videos

Zoho Jobs : ஜோஹோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. FRESHER- களுக்கு வேலையா? செக் பண்ணுங்க!

இந்தியன் வங்கி உள்ளூர் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு விவரம் :

பதவியின் பெயர் உள்ளூர் வங்கி அதிகாரி (ஸ்கேல்-I)
மொத்த காலியிடங்கள் 300
விண்ணப்பம் தொடங்கும் தேதி ஆகஸ்ட் 13, 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 2, 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் indianbank.in

கல்வித் தகுதி

உள்ளூர் வங்கி அதிகாரி (ஸ்கேல்-I) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியல் அல்லது பட்டப்படிப்பு சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு

உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு ஜூலை 1, 2024 இன் படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு பொருந்தும்:

வயது தளர்வு

SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
OBC (கிரீமி லேயர் அல்லாத) விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளி நபர்கள்: 10 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிற பிரிவுகள்: வழிகாட்டுதல்களின்படி 5 ஆண்டுகள் வரை.

மாதம் 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.. 25 பேருக்கு தான் இன்டர்ன்ஷிப்.. உடனே அப்ளை பண்ணுங்க!

தேர்வு செயல்முறை

தேர்வு செயல்முறை பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது அமையும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்பையில் விண்ணப்பதாரர்கள் நடத்தப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டால், ரீசனிங் & கம்ப்யூட்டர் ஆப்டிட்யூட், பொது/பொருளாதாரம்/வங்கி விழிப்புணர்வு, ஆங்கில மொழி மற்றும் தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கம் போன்ற பாடங்கள் இருக்கும். தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மற்றும் நேர்காணலின் ஒருங்கிணைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

பதிவு கட்டணம்
பொது பிரிவினருக்கு ரூ.1,000
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ரூ.1,000
பட்டியல் வகுப்பினர் (SC) ரூ175
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) ரூ.175
மாற்றுத்திறனாளி நபர்கள் ரூ.175

மொத்த காலியிடங்கள்

தமிழ்நாடு / புதுச்சேரி - 160
கர்நாடகா 35
ஆந்திரா மற்றும் தெலுங்கானா 50
மகாராஷ்டிரா 40
குஜராத் 15
மொத்தம் 300

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  • இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று careers பிரிவுக்கு செல்லவும்.
  • ““Recruitment of Local Bank Officers – 2024 என்ற இணைப்பைக் கிளிக் செய்து, பதிவு செயல்முறையைத் தொடங்கவும்.
  • தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
  • வழங்கப்பட்ட கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, உறுதிப்படுத்தல் ரசீது மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சிடவும்.
click me!