டாக்டருக்கு படிக்க சிறந்த இடங்கள்! குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள்!

By SG Balan  |  First Published Aug 28, 2024, 10:07 PM IST

பொதுவாக மருத்துவப் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் தான் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.16,073 மட்டுமே. SC, ST பிரிவினருக்கு ரூ.12,073 மட்டும் கட்டணம் பெறப்படும்.


தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்து மருத்துவம் படிக்க முடியும். இவற்றில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள 85% இடங்கள் தமிழக அரசால் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மொத்தம் 6,630 இடங்கள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிளில் குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் எவை என்று பார்க்கலாம்.

அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.16,073 மட்டுமே. இதில் கல்வி கட்டணம் ரூ.6,000, சிறப்பு கட்டணம் ரூ.2,000, அவசரநிலை டிபாசிட்  ரூ.1,000, நூலகக் கட்டணம் ரூ.1,000, பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.7,473, காப்பீட்டுக் கட்டணம் ரூ.300, ரெட் கிராஸ் கட்டணம் ரூ.100, கொடி நாள் கட்டணம் ரூ.100, இதர கட்டணங்கள் ரூ.100 ஆகியவை அடங்கும். இதில் SC, ST பிரிவினருக்கு ரூ.12,073 மட்டும் கட்டணம் பெறப்படும். பொதுவாக மருத்துவப் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் தான் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை:

இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரி 10வது இடத்தில் உள்ளது. 1835ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு ரூ.16,073 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசம்! விஞ்ஞானிகளை அசர வைத்த கண்டுபிடிப்பு!!

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 1838ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது அரசு மருத்துவ கல்லூரிகளில் முன்னணியில் உள்ளது. இங்கும் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இங்கும் அரசு நிர்ணயித்தபடி ரூ.16,073 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அரசு கோவை மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்:

கோவையில் உள்ள அரசு கோவை மருத்துவக் கல்லூரி 1966ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் 200 இடங்கள் உள்ளன. இங்கேயும் எம்.பி.பி.எஸ் படிக்க அரசு நிர்ணயம் செய்தபடி ரூ.16,073 கட்டணம் வசூலிக்கப்படும்.

அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சை:

தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அரசு நிர்ணயித்த ரூ.16,073 தான் இங்கும் கட்டணமாக பெறப்படுகிறது.

அரசு மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை:

1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க 250 இடங்கள் உள்ளன. இங்கும் அரசு நிர்ணயித்த கட்டணம்தான். ஆண்டுக்கு ரூ.16,073 கட்டணமாகப் பெறப்படும்.

சென்னை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, கே.கே.நகர், சென்னை:

இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் படிக்க அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.1 லட்சம். சென்னையிலேயே உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவப் படிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது.

திருச்சியில் உள்ள கே.ஏ.பி. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் முன்னணி அரசு மருத்துவ கல்லூரிகளாக உள்ளன.

12ஆம் வகுப்பு தேர்வில் 9-11 வகுப்புகளில் பெற்ற மார்க்கையும் சேர்க்கணும்: NCERT பரிந்துரை

click me!