12ஆம் வகுப்பு தேர்வில் 9-11 வகுப்புகளில் பெற்ற மார்க்கையும் சேர்க்கணும்: NCERT பரிந்துரை

By SG Balan  |  First Published Aug 28, 2024, 6:21 PM IST

9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் செயல்திறன் அவர்களின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) முன்மொழிந்துள்ளது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பரிந்துரை செய்துள்ளது. 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் செயல்திறன் அவர்களின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

'கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை நிறுவுதல்' என்ற தலைப்பில் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முற்போக்கான மதிப்பீட்டு கட்டமைப்பு என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

புதிய கட்டமைப்பானது கல்வியாண்டை இரண்டாகப் பிரிக்கிறது. 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளின் மதிப்பெண்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்தது.

தபால் துறையில் சூப்பர் வேலை! ரூ.63,200 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!!

“ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிவ மற்றும் கூட்டு மதிப்பெண்களின் வெயிட்டேஜ் படிப்படியாக மாற்றியமைக்கப்படும். படிப்பவர்கள் தரநிலையில் முன்னேறும்போது, ​​கூட்டு மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 9ஆம் வகுப்பில் 7 சதவீதம் படிவ மதிப்பெண்கள் மற்றும் 30 சதவீதம் கூட்டு மதிப்பெண்கள், 10ஆம் வகுப்பில் இரண்டுக்கும் சமமாக 50% மதிப்பெண்கள், 11ஆம் வகுப்பு முதல் 40 சதவீதம் படிவ மதிப்பெண்கள் மற்றும் 60 சதவீதம் கூட்டு மதிப்பெண்கள் இருக்கும். 12ஆம் வகுப்பு முதல் 30 சதவீதம் படிவ மதிப்பெண்கள் மற்றும் 70 சதவீதம் கூட்டு மதிப்பெண்கள் இருக்கும்" என அறிக்கை கூறுகிறது.

"இதன் விளைவாக, இரண்டாம் நிலையின் முடிவில் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 9ஆம் வகுப்பிற்கு 15 சதவிகிதம், 10ஆம் வகுப்பிற்கு 20 சதவிகிதம், 11ஆம் வகுப்பிற்கு 25 சதவிகிதம் மற்றும் 12ஆம் வகுப்பிற்கு 40 சதவிகிதம்" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக மாணவர்களின் செயல்திறன் அவர்களின் இறுதி மதிப்பெண்களில் பிரதிபலிக்கும்.

9 முதல் 12 ஆம் வகுப்புகளில் கற்பவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மதிப்பீட்டுக் கட்டமைப்பானது, இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அறிக்கை சொல்கிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, மதிப்பீட்டு கட்டமைப்பு இரண்டு விதிமுறைகளாக பிரிக்கப்படும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

போலி அடிடாஸ் ஷூவை எப்படி கண்டுபிடிக்கலாம்? டூப்ளிகேட் வாங்கி ஏமாறாதீங்க!

click me!