தபால் துறையில் சூப்பர் வேலை! ரூ.63,200 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!!

By SG Balan  |  First Published Aug 27, 2024, 5:15 PM IST

தபால் துறையில் Skilled Artisans பிரிவில் உள்ள 10 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் மட்டுமே அவகாசம் உள்ளதால் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் துறையில் Skilled Artisans பிரிவில் உள்ள 10 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

காலிப் பணியிடங்கள்:

மோட்டார் வாகன மெக்கானிக் - 4

மேட்டார் வாகன எலக்ட்ரிஷியன்- 1

கார்பென்டர் - 1

டயர்மேன் - 1

பிளக்ஸ்மித் - 3

மொத்தம் காலியாக உள்ள பணியிடங்கள் - 10

கல்வித் தகுதி:

இந்த வேலையில் சேர ஐடிஐ படிப்பு முடித்து இருக்க வேண்டும். அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஓராண்டு பணி அனுபவமும் இருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பிக்க, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம்.

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024ஆம் தேதி 18 முதல் 30 வயதுக்குள் இருப்பது அவசியம், SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

தபால் துறையின் இந்த வேலைகளுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அவர்களுக்கான வேலை மற்றும் பணி அனுபவத்தைப் பொறுத்து, மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

இந்த வேலைவாய்ப்பில் போட்டி திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். ரூ.100 விண்ணப்ப கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC, ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். கவரின் மேல்பகுதியில் Application for the post of Skilled Artisan in Trade என்று எழுதி, விண்ணப்பிக்கும் பணியின் பெயரையும் குறிப்பிட்ட வேண்டும்.

The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai - 600 006

விண்ணப்பிக்க இன்னும் 3 நாள்களே இருப்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கீழே கொடுக்ப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்யலாம்.

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf

click me!