12வது முடிச்சாலே போதும்! கான்ஸ்டபிள் வேலை! மாதம் 69 ,000 சம்பளம்.!

By vinoth kumar  |  First Published Aug 22, 2024, 2:44 PM IST

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 1,130 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை.


சிஐஎஸ்எஃப் என்று அழைக்கப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. விமான நிலையம், அணு உலைகள், விண்வெளி ஆய்வு மையம், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிஐஎஸ்எப் வீரர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் 1,130 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காலிப்பணியிடங்கள்: 

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் 39 இடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 1,130 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், கான்ஸ்டபிள் / தீ அணைப்பு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

கல்வித்தகுதி: 

சிஐஎஸ்எப் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

வயது வரம்பு: 

வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 30.09.2024ன் படி 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

வயது உச்ச வரம்பு தளர்வு

வயது உச்ச வரம்பு தளர்வை பொறுத்தவரை எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.

சம்பளம் : 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

எஸ்சி / எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற பொது பிரிவினர் ரூ.100 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்  செப்டம்பர் 30ம் தேதி வரை.

தேர்வு முறை:

 எழுத்து தேர்வு, உடல் தகுதி/ உடல் திறன் (PET/ PST), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். சிபிடி எனப்படும் கணிணி வழி தேர்வாக இந்த தேர்வு நடைபெறும். 

விண்ணப்பம் செய்யும் இணையதளம்:

https://cisfrectt.cisf.gov.in/ என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இணையதளம் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

click me!