வெளிநாட்டில் படிக்க சூப்பர் சான்ஸ்! சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் சென்று படிக்கலாம்!!

By SG Balan  |  First Published Aug 20, 2024, 4:52 PM IST

புதிய விதிகளின்படி, இப்போது தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளுக்கான நீண்ட கால விசிட் பாஸ் (LTVP) பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாணவரும் ஒரு பாதுகாவலருடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இன்னும் மாற்றப்படவில்லை.


சிங்கப்பூரில் படிக்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு புதிதாக ஒரு நல்ல செய்தியை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டில் கல்வியைத் தொடரும்போது அவர்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை அழைத்துவர அனுமதிக்கும் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் சிங்கப்பூரில் கல்வி கற்க வருவதை எளிமையாக்கவும், மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க அனுமதிப்பதன் மூலம் கூடுதல் ஆதரவை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மாணவர்கள் பாதுகாவலரை அழைத்து வருவதற்கான விதி இந்த மாதம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தந்தை, தாத்தா உட்பட ஆண் பாதுகாவலர்கள் மாணவர்களுடன் சேர்ந்து நீண்ட கால விசிட் பாஸ்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தாய் அல்லது பாட்டி போன்ற பெண் பாதுகாவலர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கிடைத்து வந்தது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 18,720 பெண் ஊழியர்களுக்கு ரூ.706 கோடியில் குடியிருப்பு வசதி!

சர்வதேச மாணவர்களை சிங்கப்பூருக்கு ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கல்விக்கு குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினரை அழைத்துவரும் விதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள என்றும் சிங்கப்பூர் அரசு கூறுகிறது.

ஆனால், ஒவ்வொரு மாணவரும் ஒரு பாதுகாவலருடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இன்னும் மாற்றப்படவில்லை. புதிய விதிகளின்படி, இப்போது தகுதியுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளுக்கான நீண்ட கால விசிட் பாஸ் (LTVP) பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த LTVP பாஸ் தான் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கும். மாணவர்கள் குடும்பத்தினருடன் இருப்பதால், வீட்டை விட்டு வெளியே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துலாம்.

விண்ணப்பிக்கும்போது அனைத்து ஆவணங்களும் முழுமையாகவும் ஒழுங்காகவும் இருந்தால், 6 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில வேளைகளில் செயலாக்க நேரம் கூடுதலாகத் தேவைப்படலாம். விண்ணப்பத்தின் மீதான முடிவு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் அறியப்படாத அதிசயங்கள்! புரியாத புதிர்கள்!!

click me!