7,951 காலியிடங்கள்.. இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Raghupati R  |  First Published Aug 20, 2024, 1:31 PM IST

இந்திய ரயில்வேயில் 7,951 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆர்ஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்திய ரயில்வேயில் 7,951 வேலை காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் தேர்த்தியானது ஜூலை 30 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் 29 வரை திறந்திருக்கும். காலியிடங்களில் ஜூனியர் இன்ஜினியர் (JE) மற்றும் மெட்டீரியல் சூப்பிரண்டுக்கான 7,934 பணியிடங்களும், ரசாயன மேற்பார்வையாளர், உலோகவியல் உதவியாளர் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான 17 பணிகளும் அடங்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆர்ஆர்பி (RRB) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரபூர்வ ஆர்ஆர்பி இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சரி செய்ய ரூ.250 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு முறையானது கணினி அடிப்படையிலான சோதனையை (CBT) உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையும் இருக்கும். விண்ணப்பதாரர்களுக்கான தகுதியான வயது வரம்பு 18 முதல் 36 ஆண்டுகள். ஆட்சேர்ப்பு செயல்முறை CBT -இன் இரண்டு நிலைகளையும், வேலைக்கேற்ப உடற்தகுதியை உறுதிப்படுத்த முழுமையான மருத்துவ பரிசோதனையையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் ரூ.35,400 சம்பளத்துடன் தொடங்குவார்கள். அதே சமயம் கெமிக்கல் மேற்பார்வையாளர்கள் ரூ.44,900 இல் தனது சம்பளத்தை பெறுவார்கள். அடிப்படை சம்பளத்துடன் கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), மருத்துவ பலன்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் போன்ற ஓய்வூதிய பலன்கள் உட்பட பல்வேறு அலவன்ஸ்களைப் பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் காலக்கெடுவை கவனமாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேர இது ஒரு அருமையான வாய்ப்பு ஆகும்.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

click me!