இன்ஃபோசிஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் பவர் புரோகிராம் என்ற பெயரில் வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயற்சி பெறும் புதியவர்களுக்கு ஆண்டுக்கு ₹9 லட்சம் வரை சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கான பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 'பவர் புரோகிராம்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் புதியவர்களுக்கு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
பொதுவாக இன்ஃபோசிஸ் நிறுவனம் புதியவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறது. சமீபத்தில் பல ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதால் இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
undefined
தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்லூரிகளில் மட்டுமே இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சேரும் புதியவர்களுக்கு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் படிக்க சூப்பர் சான்ஸ்! சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் சென்று படிக்கலாம்!!
பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்தும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் தவிர மென்பொருள் சவால்கள், நிரலாக்கத் திறன் சோதனை ஆகியவற்றுக்குப் பின்பே தகுதியானவர்களைப் பணியில் சேர்க்க உள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் புதியவர்களுக்கு ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற புதியவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் 15,000 முதல் 20,000 பட்டதாரிகளைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 40,000 புதியவர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,000 பேர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அதன் எதிரொலியாக கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த போன் நம்பர் தேவையில்ல! பாதுகாப்பைக் கூட்டும் புது அப்டேட்!