இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலி பணியிடங்கள்!தமிழகத்திற்கு எத்தனை இடங்கள் தெரியுமா?

By vinoth kumarFirst Published Aug 29, 2024, 12:04 PM IST
Highlights

Indian Overseas Bank Recruitment : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 130 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஒராண்டு ஒப்பந்த அடிப்படையில் 550 பயிற்சி பணியிடங்களை (Apprentices) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 130 பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுததியானவர் என்பதை பார்ப்போம். 

பணியிடங்கள் விவரம்:

Latest Videos

மொத்தம் 550 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில், தமிழகத்தில் மட்டும் 130 இடங்களும், புதுவையில் 14, கேரளாவில் 25, கர்நாடகாவில் 50 உள்ளிட்ட பல்வேறு மாநில பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

கல்வி தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 20 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயது மிகாமல் இருக்க வேண்டும். 

வயது உச்ச வரம்பில் தளர்வுகள்:

எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் 
மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் 
முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிற பிரிவுகள்: வழிகாட்டுதல்களின்படி 5 ஆண்டுகள் வரை.

ஊதியம்: 

 மெட்ரோ நகரங்களில்  ரூ.15,000 , நகரங்களில் 12,000, கிராமப்புற பகுதிகளில் ரூ.10,000 மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை: 

ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக் கட்டணம்:

பொதுப்பிரிவினர்/ஒபிசி/ பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு  ரூ.944
பட்டியல் வகுப்பினர் (SC/ST) ரூ.708
மாற்றுத்திறனாளி நபர்கள் ரூ.472 

விண்ணப்பிக்க கடை தேதி:

விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று முதல் 10.09.2024 கடைசி நாள் ஆகும். 

ஆன்லைன் தேர்வு:

ஆன்லைன் தேர்வு வரும் 22.09.2024(Tentative) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க இணையதளம்: 

https://bfsissc.com/

click me!