NIACL: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்! நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் வேலை வாய்ப்பு! மாத சம்பளம் ரூ.96,765!

By vinoth kumarFirst Published Sep 18, 2024, 9:24 AM IST
Highlights

New India Assurance: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் ( என்ஐஏ ) என்பது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 170 காலியிடங்கள் உள்ளதாகவும் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் மாதம் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

நிறுவனம்:    

Latest Videos

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 

பணியின் பெயர்: 

Administrative Officers (Accounts) (Scale-I)

மாத சம்பளம்: 

ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை 

காலியிடங்களின் எண்ணிக்கை: 

50 காலி பணியிடங்கள்

கல்வி தகுதி: 

Accounts பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: 

Administrative Officers (Generalists) (Scale-I)

சம்பளம்: 

ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை 

காலியிடங்களின் எண்ணிக்கை:

120 காலி பணியிடங்கள்

கல்வி தகுதி: 

பணியிடங்களுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

எஸ்.சி., எஸ்.டி,– 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி, PWBD பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100, மற்றவர்களுக்கு ரூ.850. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

செப்டம்பர்-29

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.newindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

click me!